கோவை வால்பாறை அருகே சர்க்கரை நோய் பாதிப்பால் இளம்பெண் உயிரிழப்பு..!

சர்க்கரை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை வால்பாறை அருகே சர்க்கரை நோய் பாதிப்பால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வால்பாறை அருகே உள்ள முடிஸ், கஜமுடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் 34 வயதான ரவிக்குமார். நகைக்கடை மேலாளராக உள்ளார். இவருக்கு கடந்த 8-ஆண்டுகளுக்கு முன்பு 31-வயதான சந்தியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், கர்ப்பமாக இருந்த சந்தியாவுக்கு கடந்த மாதம் 26 ஆம் தேதி மேலும், ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், சந்தியா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வந்ததாக தெரிகிறது.

கடந்த சில தினங்களாக சர்க்கரை நோய் அதிகரித்ததால், அவரது உறவினர்கள் சந்தியாவை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சந்தியா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...